Menu Close

What should we think before we share something on the internet

Nowadays we do not think about what we share on the internet.
There are Tamil websites that share photos and videos without thinking about people’s privacy, and the problem does not stop here. This problem continues, when other people share these contents on social media platforms. Some people forget that they do have responsibility for their own society and for other people as well. An important question is:
Will they be able to share bad contents about their family members on the internet?

இணையத்தில் பகிரும் போது நீங்கள் சிந்திக்க வேண்டிய விடயங்கள்

கொலை கொள்ளை குடும்ப பிரச்சனைகள் உடனுக்குடன் இணையத்தில் வெளி வந்து கொண்டு இருக்க, நாங்களும் சமூக ஊடகங்கள் மூலம் உடனுக்குடன் அவைகளை பகிர்ந்து கொள்கிறோம்.
இப்படி பகிர்ந்து கொள்வதன் மூலம் எமது சமூகத்தை தவறான பாதையில் கொண்டு செல்கிறோம் என்பதை சிந்திக்காமல் பகிர்ந்து கொள்கிறோம்.
யாரோ இருவர் ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு தவறு செய்து விட்டார்கள் என்றால், அவர்களது புகைப் படத்தையோ இல்லை அந்த சம்பவத்தை ஒரு காட்சியாக பிடித்து இணையத்தில் பகிரும்போது:

1. அந்த இருவரின் எதிர்காலம் பற்றி சிந்திப்பதில்லை
2. அந்த இருவரின் குடும்பத்தை பற்றி சிந்திப்பது இல்லை

உண்மையாக என்ன நடந்தது என்பதை அறியாமல், சுடச்சுட செய்திகள் வந்து விட்ட்து, பகிர்ந்து கொள்ளலாம் என இணையத் தளத்தை உருவாக்குபவர்கள் சிலர் செய்கிறார்கள், அவர்கள் நோக்கம் என்னவாக இருக்கும் என்று பார்த்தோம் என்றால்:

• பணம் உழைப்பது இல்லை என்றால் அவர்களது இணையாத் தளத்தை பிரபல்யம் செய்வதே நோக்கமாக இருக்கும்.

எங்கள் குடும்பஸ்தர் யாரவது இப்படி நடந்தால் – நாங்கள் பகிர்ந்து கொள்வோமா?
ஆகவே எமது மக்களையும் எமது சமூகத்தையும் நாங்களும் சேர்ந்து சீரழிக்கின்றோம் என்பதை சிந்திக்காமல் நாம் இப்படிப் போன்ற விடயங்களை பகிர்ந்து கொள்கிறோம்.